பிராட்வே : சென்னை, வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் துறையினர், பொதுமக்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, பிராட்வேயில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மேற்கொண்டனர்.
சென்னை வடக்கு மாவட்ட போக்குவரத்து துணை ஆணையாளர் ஹர்சிங், வடக்கு கடற்கரை காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், பிராட்வே 'சிக்னல்' பிரதான சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில், தலைகவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு போக்குவரத்து போலீசாருக்கு இலவச 'ஹெல்மெட்'டுகளை வழங்கினர்.
மேலும், 'சீட் பெல்ட்' அணியாதது, குடித்து வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை மதிக்காததால் ஏற்படும் விபத்துகள் குறித்தும், துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.