காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம் செவ்வாய்க்கிழமை தோறும் நடத்தி வருகிறார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் மனுக்கள் கொடுக்க போதிய ஆர்வம் காட்டாததால், பொதுமக்களிடம் குறைதீர் கூட்டமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய, அமைச்சர் அன்பரசன் ஈரோடு சென்ற காரணத்தால், சில வாரங்களாக இக்கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.
தேர்தல் நேற்று முடிந்த நிலையில், வழக்கம்போல் இன்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் கூட்டம், அமைச்சர் அன்பரசன் தலைமையில், கலெக்டர் வளாக கூட்டரங்கில், காலை 10:00 மணிக்கு நடக்க உள்ளது.