மணவாள நகர் : மணவாள நகர் அடுத்த, நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் கண்ணன், 36. இவரது மனைவி சுமிதா, 35
மாடுகள் வைத்து தொழில் நடத்தி வந்த கண்ணன், 2022ம் ஆண்டு, மே மாதம், 21ம் தேதி, உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது இவரது வீட்டிற்கு சென்ற கண்ணனின் பெற்றோரான சங்கர் மற்றும் உமா ஆகிய இருவரும், சுமிதாவை ஆபாசமாக பேசி தாக்கி மொபைல்போன் மற்றும் எட்டு பசு மாடுகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நேற்று முன்தினம் கண்ணன் அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.