ஊத்துக்கோட்டை : திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை, ஊத்துக்கோட்டை சட்டப் பணிகள் குழு மற்றும் ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்கம் இணைந்து தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊத்துக்கோட்டையில் நடந்தது.
ஊத்துக்கோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜி.செந்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்க தலைவர் சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் சார்பில் நீதிபதியும், மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழு செயலருமான பி.வி.சான்டில்யன் பங்கேற்றார்.
இதில் பேசியவர்கள், பெண்களுக்கான உரிமைகள், திட்டங்கள், தொழில் முனைவோரை மேம்படுத்துதல், பெண் குழந்தைகள் நிலையை உயர்த்துதல் ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.
பெண்களுக்கு எப்போது துயரங்கள் நிகழ்ந்தாலும், அவற்றில் இருந்து அவர்களை காக்க சட்டம் இயற்றப்படுகிறது. மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியபாமா, வழக்கறிஞர்கள் பத்மினி, வெற்றித்தமிழன், ஸ்ரீவித்யா, ஷீபா ஆகியோர் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து விளக்கினர்.
அரசு வழக்கறிஞர் வெஸ்லி, சங்க செயலர் முனுசாமி, பொருளாளர் தினகரன் மற்றும் மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.
Advertisement