கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 37. நான்கு நண்பர்களுடன், 'ஸ்கார்பியோ' காரில், ராமேஸ்வரம் சென்று, வீடு திரும்பி கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை, சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அருகே சென்றபோது, காரின் முன் பக்கத்தில் புகை வெளியேறியது.
காரை ஓரமாக நிறுத்தியதும், முன் பக்கம் தீப்பிடிக்க துவங்கியது. உடனடியாக காருக்குள் இருந்த உடமைகளை வெளியே எடுத்து தீயை அணைக்க முயன்றனர்.
மளமளவென தீ பரவியதால், கட்டுக்கு அடங்காமல் கொளுந்து விட்டு எரிந்தது.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுதும் தீக்கு இரையானது. கவரைப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.