புதுச்சேரி, : சிகரெட் தராததால், வாலிபரை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ரெயின்போ நகர், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் போரிஸ் வில்சன், 30; பி.டெக் பட்டதாரி. இவர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு நண்பர்களுடன் பாண்டி மெரினா கடற்கரைக்கு சென்றார். அங்கு இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, எதிரில் வந்த 4 பேர், வில்சனை வழிமறித்து சிகரெட் கேட்டனர். அவர் இல்லை என்றதால், 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.
அப்போது, அங்கு ரோந்து வந்த போலீசார், நால்வரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் வம்பாகீரப்பாளையம் கவி, 22; கணேஷ்,18; வைத்திக்குப்பம் ரவி, 21; சின்னையாபுரம் சத்தியமூர்த்தி, 22; என்பது தெரிய வந்தது.
ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் கைது செய்தனர்.