ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (மார்ச் 1) பிளஸ் 2 செய்முறை தேர்வில் 159 பள்ளிகளை சேர்ந்த 32 ஆயிரத்து 19 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக 107 மையங்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், ஏப்.,ல் நடைபெற உள்ளது. நாளை (மார்ச் 1) முதல் மார்ச் 9 வரை பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடக்கிறது. இது தொடர்பாக தலைமையாசிரியர்கள் ஆலோனை கூட்டம் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார்.
செய்முறை தேர்வுகள் குறித்த நேரத்தில் துவங்கி முடிக்க வேண்டும். தேவையான அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் செய்து தர வேண்டும், என அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் பிளஸ் 1 ல் 70 அரசு பள்ளிகள் உட்பட 160 பள்ளிகளை சேர்ந்த 29 ஆயிரத்து 923 பேரும், பிளஸ் 2 தேர்வில் 159 பள்ளிகளை சேர்ந்த 32 ஆயிரத்து 19 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக 107 தேர்வு மையங்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
புற தேர்வர்களுக்கான நியமன ஆணைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது, என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.