சேத்தியாத்தோப்பு, : பயிர்களை விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி, விவசாய கூலி தொழிலாளி இறந்தார்.
கடலுார் மாவட்டம் அடுத்த கொண்டசமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகள், இரவு நேரங்களில் வேர்கடலை பயிரை அழித்து வருகின்றன.
காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக கொண்டசமுத்திரத்தில் விவசாயிகள் பலர், அவர்களது வயல்களை சுற்றி, இரவு நேரங்களில் மின்வேலி அமைத்துள்ளனர்.
கொண்டசமுத்திரம், விராகுடி தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 62, விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று அதிகாலை 6.00 மணியளவில், ஜனார்த்தனன் என்பவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற போது, காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி, சம்பவ இடத்திலே இறந்தார்.
சோழத்தரம் போலீசார் சுப்ரமணியன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.