விழுப்புரம், : விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் 'மாஜி' சிறப்பு டி.ஜி.பி., மீதான பாலியல் வழக்கு விசாரணை நாளை (1ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி., மற்றும் சாட்சிகள் ஆஜராகவில்லை.
வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, வழக்கின் விசாரணையை, நாளைக்கு (1ம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.