திட்டக்குடி, : மாசிமகத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மண்டல துணைதாசில்தார் முருகன், வைத்தியநாதசுவாமி கோவில் செயல்அலுவலர் சிவப்பிரகாசம், நகராட்சி சேர்மன் வெண்ணிலா, துணைசேர்மன் பரமகுரு, திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர்வசதி, கழிவறை வசதி, மருத்துவ வசதி ஏற்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.