சின்னாளபட்டி : ''நம் எண்ணங்களே நம்மை உயர்த்தும்,'' என, கலெக்டர் விசாகன் பேசினார்.
காந்திகிராம பல்கலையில் அரசின் 'நான் முதல்வன்' திட்ட கள பயண நிகழ்ச்சியில் தலைமை வகித்த அவர் பேசியதாவது :
கல்வித்தரத்தை மேம்படுத்தும் அரசு திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை கல்லுாரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி வழிகாட்டல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி செயல்படுத்தப்படுகிறது.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் புதுமை பெண் திட்டத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவியர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
களப்பயணம் மூலம் உயர்கல்வியில் எதிர்கால வேலை வாய்ப்பு, உயர்கல்வி பிரிவுகள் தொடர்பான தகவல்களை மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ள முடியும்.
நம் எண்ணங்களே நம்மை உயர்த்தும். உயர் கல்விக்காக அரசு வழங்கும் திட்டம் சலுகைகளை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,என்றார்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் நாகமணி, பல்கலை கல்வி இயக்குனர் உதயகுமார், புல முதன்மையர் பாஸ்கரன், வேலைவாய்ப்பு பணியக இயக்குனர் ராமநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதின் பங்கேற்றனர்.