கண்டமங்கலம், : கண்டமங்கலத்தில் மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், ஏழுமலை, திருநாவுக்கரசு, ஒன்றிய துணைத் தலைவர் காசிநாதன், பொருளாளர் கவுரி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் முருகன், துணைச் செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 4:00 மணி நேரம் பணி மற்றும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு நீல வண்ண சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்ன.
தொடர்ந்து கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்று துணை பி.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.