விழுப்புரம், : விழுப்புரம் அருகே குடியிருப்பு பகுதியில் தனியார் மொபைல் போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் விழுப்புரம் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனுஅளித்தனர்.
விழுப்புரம், ஏ.பி.எஸ்.நகர், கிரீன் கார்டன், சீரடி சாய் நகர், தெய்வ நகர் பகுதி மக்கள் அளித்துள்ள மனு:
விராட்டிக்குப்பம் பாதை பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
எங்கள் குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் மொபைல் போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் மொபைல் போன் டவர் அமைப்பதால் குழந்தைகள், முதியவர்கள் பல்வேறு பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனால், மாற்று இடத்தில், மொபைல் போன் டவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் குடியிருப்பு பகுதியில் பணி மேற்கொண்டுள்ளனர்.
எனவே, டவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, குடியிருப்புகள் அல்லாத இடத்தில் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.