சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு பகுதியில், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை, அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வில் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத் தோப்பு, வெய்யலுார் காலனியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன், 23; இவர் 4ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை, நேற்று முன்தினம் இரவு, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வெற்றிச்செல்வனை பிடித்து, சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
டி.எஸ்.பி., ரூபன்குமார், விசாரணை செய்தார். புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வெற்றிச்செல்வனை 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.