கடலுார், : மத்திய பிரதேசத்தில் நடந்த அகில இந்திய திறனாய்வு போட்டியில் கடலுார் மாவட்ட தலைமைக் காவலர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மத்திய பிரதேசம், போபாலில் 66வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி நடந்தது.
இதில், அனைத்து மாநில காவல் துறையினர், துணை ராணுவ படையினர் பங்கேற்றனர்.
வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு திறனாய்வு போட்டியில் தமிழக காவல் துறை சார்பில் பங்கேற்ற கடலுார் மாவட்ட தலைமைக் காவலர் பாபு முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இவரை, கடலுாரில் எஸ்.பி.,ராஜாராம் பாராட்டினார்.