கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துார் கிராமம், கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பாலு மகன் விஸ்வநாதன், 60.
இவர், கடந்த 26ம் தேதி, குடும்பத்தினருடன் சென்னை சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3.5 சவரன் தங்க நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து விஸ்வநாதன் அளித்த புகாரையடுத்து, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.