கடலுார் : கடலுார் அடுத்த உச்சிமேடு வன்னியர் தெரு சீனுவாசன் மகன் பன்னீர்செல்வம் 75; நேற்று முன்தினம் இரவு கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு பெரிய கங்கணாங்குப்பம் தென்பெண்ணையாறு பாலத்தில் நடந்து சென்றார்.
எதிர்பாராதவிதமாக முதியவர் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். கடைக்கு சென்றவரை காணவில்லை என மகன் எழிலரசன் உள்ளிட்ட உறவினர்கள் பல இடங்களில் தேடினர். அப்போது பாலத்திற்கு கீழ் தலை, கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயங்களுடன் முதியவர் கிடந்தார்.
உடனே அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை அவர் சிகிச்சை பலனில்லாமல் இறந்தார்.
இது குறித்து மகன் எழிலரசன் 39; கொடுத்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.