அமேதி உத்தர பிரதேசத்தில் அரசியல் முன்விரோதம் காரணமாக, கிராம பஞ்., பெண் தலைவரின் கணவர் மற்றும் மருமகனை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அமேதி மாவட்டத்தின் தாத்ரா கிராம பஞ்., தலைவரின் கணவரும், மருமகனும் நேற்று வெளியூர் சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினர்.
அப்போது, தாத்ரா கிராமத்தின் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், இவர்கள் மீது சுட்டதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. இளமாறன் கூறுகையில், ''இது அரசியல் முன்விரோதம் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆறு பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்,'' என்றார்.