ஆட்சி அமைப்போம்!
சட்டசபை தேர்தல் நடந்த மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அமையும். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வர், பா.ஜ.,
விளக்க வேண்டும்!
மக்கள் நலனுக்காக பா.ஜ., அரசு செய்துள்ள பணிகள் குறித்து மக்களுக்கு கட்சியினர் விளக்க வேண்டும். இவ்வளவு பணிகள் நாம் செய்தும், லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறாவிட்டால் எப்படி?
கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர், பா.ஜ.,
ஓட மாட்டோம்!
கடந்த ௩௦ ஆண்டுகளாக பல குற்றச்சாட்டுகளை நாங்கள் பார்த்துவிட்டோம். எங்கும் ஓடிவிட மாட்டோம். ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவைப் பார்த்து பா.ஜ., பயப்படுகிறது. அதனால், புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துகிறது.
ராப்ரி தேவி
பீஹார் முன்னாள் முதல்வர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்