கிணத்துக்கடவு,:கிணத்துக்கடவில் கல்லுாரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஏலுார் பிரிவில் உள்ள, தனியார் பொறியியல் கல்லுாரி அருகே, சந்தேகப்படும் படியாக இருந்த வாலிபரிடம் விசாரித்தனர்.
அவர், சிகரெட் பாக்கெட்களை பதுக்கி வைத்து, மாணவர்களுக்கு விற்பனை செய்வதும், கிணத்துக்கடவு கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த விஜய், 39, என்பதும் தெரியவந்தது. கிணத்துக்கடவு போலீசார், அவரை கைது செய்து, சிகரெட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.