ராமேஸ்வரம்:கச்சத்தீவு திருவிழாவையொட்டி இன்று முதல், 4ம் தேதி வரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன் துறையினர் தடை விதித்தனர்.
ராமேஸ்வரத்திற்கு கிழக்கு பகுதியில் பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் சர்ச் திருவிழா, வரும் 3, 4ல் நடக்கிறது.
இந்த விழாவிற்கு வரும், 3ல் ராமேஸ்வரத்தில் இருந்து, 60 விசைப்படகுகள், 12 நாட்டுப்படகுகளில், 2,408 பக்தர்கள் செல்ல உள்ளனர்.
இந்த விழாவில் அன்னியர்கள் ஊடுருவலை தடுக்கவும், பக்தர்கள் பாதுகாப்பாக சென்று திரும்புவதை உறுதி செய்யவும், இன்று முதல் பாக் ஜலசந்தி கடலில் இந்தியா - இலங்கை கடற்படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள், இன்று முதல், 4 வரை மீன்பிடிக்க செல்வதற்கு மீன் வளத்துறையினர் தடை விதித்து, மீன்பிடி அனுமதி, 'டோக்கனை' ரத்து செய்தனர்.
Advertisement