கூடலுார்;மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, 24ம் தேதி காலை, 5:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. பகல், 12:30 மணிக்கு, அம்மனை ஊர்வலமாக ஆற்றுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள் செய்தபின், மாலை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து பூஜைகள் நடந்தது.
26ம் தேதி இரவு, 8:00 மணி முதல் கங்கை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இரவு, 10:15 மணிக்கு மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. மாவட்ட கலெக்டர் அமிர்த், எஸ்.பி., பிரபாகர் வடம் பிடித்து தேர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் உலா வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நேற்று காலை மாவிளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.