வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு, நிலவுக்கு விண்கலம் அனுப்பும், 'சந்திரயான் - ௩' திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின் திறன் குறித்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில், நிலவுக்கு வரும் ஜூன் மாதத்தில், சந்திரயான் - ௩ விண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நிலவில் தரையிறங்கும், 'லேண்டர்' சாதனத்தின் சோதனை கடந்த மாதத்தில், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், விண்கலத்தை ஏந்திச் செல்லும் ராக்கெட்டின் இன்ஜினின் திறன் குறித்த பரிசோதனை, தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த சோதனை திருப்திகரமாக இருந்ததாக, இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.