மதுரை:துாத்துக்குடி மாவட்டம், கோவில் சிலைகள் திருட்டு வழக்கில், ஆறு பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, இரண்டு பேருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், சேரகுளம் அருகேயுள்ள சோமசுந்தரேஸ்வரர் நித்யகல்யாணி கோவிலில், உலோகத்திலான நடராஜர், சிவகாமி, தேவி சிலைகள் திருடு போயின.
இதுதொடர்பாக, சேரகுளத்தைச் சேர்ந்த செல்லத்துரை, கணேசன், மாரியப்பன், முத்து, பாலமுருகன், சங்கர், தினகரன், சதீஷ்குமார் ஆகியோரை, சேரகுளம் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை காலத்தில் குற்றவாளிகள் முருகன், தினகரன் இறந்தனர்.
செல்லத்துரை, கணேசன் உட்பட ஆறு பேருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பாலமுருகன், சங்கருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதித்துறை நடுவர் சிவசக்திகண்ணன் உத்தரவிட்டார்.