தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாஸ்கோநகர் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வடிவு வரவேற்றார். பள்ளியில் மொத்தமுள்ள, 585 மாணவ, மாணவியரில், 400 பேர் தங்கள் படைப்புகளை சமர்பித்திருந்தனர்.
வடக்கு வட்டார கல்வி அலுவலர்கள் முஸ்ராக் பேகம், சின்னக்கண்ணு கண்காட்சி அரங்கை பார்வையிட்டு மாணவ, மாணவியர் திறமையை பாராட்டினர். பாலமுருகன் நகர் பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி, தேவாங்கபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் ரோஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த கண்காட்சி ஒரு வகுப்பறை முழுதும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பள்ளி குழந்தைகள் மழைநீர் சேகரிப்பு, ரோபோ செயல்பாடு, காற்றாலை, சொட்டுநீர் பாசனம், ரிமோட் பஸ், கலங்கரை விளக்கம், பயிறு, தானிய வகை, உடல் பாகங்கள் உள்ளிட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. பெற்றோர்கள் கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர்.