நாகர்கோவில்:நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் செயல்பட தொடங்கும் என்று மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் வி.கே. சிங் கூறினர்.
நாகர்கோவில் பா.ஜ., கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் பிரதமர் மோடியின் கொள்கை. அந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது. விமான நிலையங்களை பொருத்தவரை அடுத்த ஆண்டு கூடுதலாக 50 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன.
கன்னியாகுமரி, சபரிமலை பகுதிகளில் தனியார் விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்க முன் வந்தால் மத்திய அரசு அங்கு விமான நிலையங்களை அமைக்கும் என்று கூறினார்.