விருதநகர் : விருதுநகர் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 63 டூவீலர்கள், 4 கார், வேன் உள்ளிட்ட 67 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
எஸ்.பி., சீனிவாசபெருமாள் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., சோமசுந்தரம், காலால் துறை ஏ.சி., அமர்தலிங்கம், மாவட்ட தானியங்கி பணிமனை பொறியாளர் முத்துக்குமார், மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி., ஜெயசந்திரன் முன்னிலையில் ஏலம் நடந்தது.
இதில் 90 பேர் பங்கேற்று 50 டூவீலர்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இதன்மூலம் ரூ.15 லட்சத்து 92 ஆயிரத்து 302 பெறப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.