சிவகாசி : சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியில் 8 வது ஆண்டு விழா நடந்தது.
மாணவி ராஷ்மிகா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சேகர் ஆண்டறிக்கை வாசித்தார். ஜி.கே.என்., ஆட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பங்குதாரர் தீபா வரதன் கல்லுாரியின் செய்தி மடலை வெளியிட, கல்லுாரி துணை செயலாளர் விக்னேஷ்குமார், நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
2022 கல்வியாண்டில் சிறப்பாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பஞ்சுராஜன் அமராவதி அறக்கட்டளையின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.