மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையே ஒற்றையர், இரட்டையர் டென்னிஸ் போட்டி நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
போட்டி முடிவுகள் :
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சிவகாசி மாணவர் ரக் ஷத் தருண் முதலிடம், சிவகாசி ரிகில் 2ம் இடம், ராமநாதபுரம் மாணவர் கவுதம் வெங்கடேஷ் 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் சிவகாசி மாணவர்கள் ரிகில், ரக்ஷத் தருண் முதலிடம், ராமநாதபுரம் யுவராஜ் கண்ணன், அப்துல்லா அம்ரு 2ம் இடம், ராமநாதபுரம் முகமது ரிபத், கவுதம் வெங்கடேஷ் 3ம் இடம் பெற்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் மதுரை ஸ்ரீவித்யாலயம் மெட்ரிக் மாணவி லனிகா முதலிடம், லீ சாட்லியர் பள்ளி மாணவி நிதிமா 2ம் இடம், திண்டுக்கல் மாணவி பிரியதர்ஷிகா 3ம் இடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் மதுரை மகாத்மா மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஜெயமீனாட்சி, அம்ரிதாஸ்ரீ முதலிடம், ராமநாதபுரம் ஐஸ்வர்யா, சஞ்சுஸ்ரீ 2ம் இடம், ராஜபாளையம் ஸ்ரீஜா, தனுஸ்ரீ 3ம் இடம் பெற்றனர்.