ஓசூர் : ஓசூர் அருகே, குமுதேப்பள்ளியில், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள அசோக்லேலண்ட் யூனிட் 2 நிறுவன நுழைவுவாயிலில், தொ.மு.ச., சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலினின், 70வது பிறந்த நாள் விழா மற்றும் பணி ஓய்வு பெறும் ஊழியருக்கு, பாராட்டு விழா நேற்று நடந்தது.
ஓசூர், மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா ஆகியோர், ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, அசோக் லேலண்ட் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும், பணி ஓய்வு பெறும் சுப்பிரமணிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். மாநகராட்சி மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், ஓசூர், தி.மு.க., பகுதி செயலாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement