குளித்தலை : குளித்தலை அருகே, அய்யர்மலையில் உள்ள டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லுாரி, தமிழாய்வு துறை இலக்கிய மன்றம் சார்பில், தமிழ் கற்கும் மாணவர்களுக்கு, தமிழ் வாய்ப்பாடு இசை பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வரும் (பொறுப்பு), இயற்பியல் துறை தலைவருமான ராமநாதன் தலைமை வகித்தார்.
தமிழாய்வு துறை தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். தமிழாய்வு துறைப் பேராசிரியர்கள் முருகானந்தன், வைரமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தேனுகா நுண்கலை பள்ளி சார்பில், இசை பயிற்சியாளர் தேன்மொழிதேவன், தமிழ் பாடல்களை இசையுடன் எவ்வாறு பாடுவது என்பது குறித்து பயிற்சி அளித்தார்.
இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தமிழாய்வு துறை பேராசிரியர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement