புதுச்சேரி : மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை சார்பில் 120-வது சிந்தனையரங்கம் ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடந்தது.
பேரவை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் காமராசு வரவேற்றார். துணைத்தலைவர்கள் கவுசல்யாதேவி, மணிமேகலை, துணை செயலாளர்கள் ராஜாராம், விசாலாட்சி,செயற்குழு உறுப்பினர்கள் பழனிபாஸ்கரன், இளமுருகன், ஜெகதீசன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திருபுவனை கலியபெருமாள் தலைமையில் 30 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் நடந்தது. சட்டசபை கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து குறித்து மக்களிடம் கருத்து கணிப்பு நடத்த வேண்டும்.
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை அரசின் உயர்கல்வித்துறையின் கீழ் இணைத்து போதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.