புதுச்சேரி : சரக்கு போக்குவரத்தினால் கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஷ்புவிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் சாகர் மாலா திட்டத்தின்கீழ் சென்னை -புதுச்சேரி இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மந்திரி சர்பானந்தா சோனுவாலுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை -புதுச்சேரி இடையிலான கப்பல் போக்குவரத்துச் சேவையின் மூலமாக போக்குவரத்துச் செலவு குறைந்து கடல்வழி வர்த்தகம் அதிகரிக்கும். மேலும், வருங்காலத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.