பாலக்காடு : கேரளாவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபருக்கு 24 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு தேங்குறுச்சியை சேர்ந்தவர் நித்யன், 22. இவர் 2022ல் 14வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஒற்றப்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பட்டாம்பி விரைவு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. குற்றவாளி நித்யனுக்கு 24 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 1.75 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டார்.