புவனகிரி : புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, புவனகரி ஒன்றியம், அழிச்சிக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் வேளாண் ஆத்ம திட்ட இயக்குனர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். கவுன்சிலர் கார்த்திகேயன் வரவேற்றார்.
கிளை செயலாளர்கள் பாஸ்கர், காளிமுத்து, பாலமுருகன், மணிவண்ணன், மனோபாலா முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தவள்ளிகலியமூர்த்தி தி.மு.க., கொடியை ஏற்றி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டி, சேலை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு பழக்கன்று, தென்னங்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கியதுடன், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் வி.சி.., ஒன்றிய பொருளாளர் ராமதாஸ், தி.மு.க., நிர்வாகிகள் பழனி, ராமசாமி, கிருஷ்ணகுமார், கோபாலகிருஷ்ணன், மணிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement