பெங்களூரு: 'டி.வி.எஸ்., மோட்டார்' நிறுவனத்தின் 'பிரீமியம் பைக்' வரிசையை சேர்ந்த 'அப்பாச்சி' பைக்குகள் விற்பனை, உலகளவில் 50 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
உலகம் முழுதும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் வலிமையான விற்பனையில் இருக்கும் அப்பாச்சி பைக், முதன்முதலில் 2005ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்து வந்த ஆண்டுகளில், பல்வேறு மாற்றங்கள், மேம்பாடுகளை கண்டு, பிரீமியம் பைக்குகளில் முன்னிலை வகிக்கும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
அப்பாச்சி வரிசை பைக்குகள், 'நேக்டு, சூப்பர் ஸ்போர்ட்' என இரு ரகங்களில் வருகின்றன.
அப்பாச்சி ஆர்.டி.ஆர் -- 160, ஆர்.டி.ஆர் - 160 4பி., ஆர்.டி.ஆர் - 180 மற்றும் ஆர்.டி.ஆர் - 200 4வி., ஆகியவை 'நேக்டு' பைக்குகளாகவும், அப்பாச்சி ஆர்.ஆர் - 310 பைக் 'சூப்பர் ஸ்போர்ட்' பைக்காகவும் வெளியிடப்பட்டு வருகின்றன.