கரூர்: கரூர் - நெரூர் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, காவிரியாற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தின் வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வழியாக மாணவ, மாணவியர், சைக்கிளில் சென்று வருகின்றனர். ஆனால், வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் இல்லை. இதனால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்பவர்கள், தடுமாறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, விபத்துகளை தவிர்க்கும் வகையில், நெரூர் சாலையில் உள்ள கிளை வாய்க்கால் பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டியது அவசியம்.