மும்பை: 'மைக்ரோசாப்ட்' இணை நிறுவனர் பில்கேட்ஸ், இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவை மும்பையில் நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது, சமூகப் பணிகளில் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து இருவரும் கலந்துரையாடியதாக, ஆனந்த் மகிந்திரா தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இது குறித்து, ஆனந்த் மகிந்திரா டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
பில்கேட்சை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. மேலும், புத்துணர்ச்சியூட்டும் வகையில் எங்களது சந்திப்பு இருந்தது. எங்களுடைய உரையாடல் வணிகத்தைப் பற்றியதாக இல்லை.
சமூகப் பணிகளில் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது பற்றித்தான் இருந்தது. 'காலநிலை பேரழிவைத் தவிர்ப்பது எப்படி' என்ற புத்தகத்தை கேட்ஸ் எழுதியுள்ளார். இப்புத்தகத்தை கையெழுத்திட்டு எனக்கு பரிசளித்தார். இவ்வாறு ஆனந்த் மகிந்திரா குறிப்பிட்டுள்ளார்.