கடலுார் : கடலுாரில், சூர்யோதே ஸ்மால் பைனான்ஸ் வங்கியை, ஆனந்தபவன் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் ராம்கி நாராயணன் திறந்து வைத்தார்.
கடலுார் நெல்லிக்குப்பம் சாலையில், அரசு மருத்துவமனை அருகே 'சூர்யோதே' ஸ்மால் பைனான்ஸ் வங்கி கிளை புதியதாக திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் பாஸ்கர் பாபு தலைமை தாங்கினார்.
கடலுார், புதுச்சேரி ஓட்டல் ஆனந்தபவன் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் ராம்கி நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வங்கியை திறந்து வைத்தார்.
வங்கி கிளை மேலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
வங்கியின் தென்மண்டல அதிகாரி ராபின்சன் எட்வர்ட், கிளை மேலாளர் ஜெரார்டு கி ேஷார் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.