கடலுார் : கடலுாரில் முதன் முறையாக 100 அரங்குகள் கொண்ட புத்தக கண்காட்சி நாளை துவங்குகிறது.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், கடலுாரில் முதல் முறையாக புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.
மஞ்சக்குப்பம் மைதானத்தில் நாளை (3ம் தேதி) துவங்கி, 12ம் தேதி வரையில் நடக்கிறது.
விழாவில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைக்கின்றனர்.
தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 வரையில் கண்காட்சி நடக்கிறது. 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இலக்கியவாதிகள், கலை பண்பாட்டுத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் இசைப்பள்ளி மாணவ -மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுக்கு தினமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement