புதுடில்லி,புதுடில்லியில் உள்ள குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், தீயணைப்பு வீரர்கள் நுாலிழையில் உயிர் தப்பினர்.
புதுடில்லி புல்பங்கஷ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தொழிற்சாலை குடோனில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குடோன் உள்ளே சென்று தீயை அணைக்க வீரர்கள் முற்பட்டபோது, திடீரென அந்த கட்டடம் சரிந்து விழுந்தது. சுதாரித்த வீரர்கள் வேகமாக வெளியேறியதால், அவர்கள் நுாலிழையில் உயிர் தப்பினர்.