மயிலம் : மயிலம் ஒன்றிய தி.மு.க., சார்பில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு தீவனுாரில் கொடியோற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவிற்கு ஒன்றிய சேர்மன் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மணிமாறன் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஏழை எளிய குழந்தைகள் பயன்பெறுகின்ற வகையில் காலை சிற்றுண்டியை பள்ளிகளில் வழங்கி வருகிறார். இதனால் பள்ளிக்கு செல்லாமல் இருந்த ஏராளமான குழந்தைகள் தற்பொழுது கல்வி கற்க பள்ளிக் கூடம் செல்கின்றனர்.கல்லுாரி படிக்கும் மாணவ மாணவியர்கள் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினால் பல மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்' என்றார்.
மாவட்ட பிரதிநிதி சேகர், ஒன்றிய விவசாய அணி பாஸ்கர், நிர்வாகிகள் பிரபு, ஞானசேகர் கவுன்சிலர்கள் செல்வகுமார், கிஷோர் பரிதா சம்சுதீன், பிரதிநிதி அன்புசேகர் உட்பட கலந்து கொண்டனர்.