சாத்துார்-சாத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மீண்டும் பன்றிகள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றன.
சாத்தூர் வைப்பாறு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பத்துக்கும் மேற்பட்டபன்றிகள் மர்மமானமுறையில் இறந்து கிடந்தன. அழுகி துர்நாற்றம் வீசியது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இவற்றை அகற்றினர்.
நேற்று சாத்தூர் அமீர் பாளையம் காட்டுப்பகுதியிலும், வைப்பாறு, கொல்லப்பட்டி கண்மாய் நீர்வரத்து ஓடையிலும் பன்றிகள்ஆங்காங்கே இறந்து கிடந்தன.
மர்ம நோயின் தாக்குதலா அல்லது முன் பகை காரணமாக யாரேனும் விஷம் வைத்து பன்றிகளை கொள்கின்றனரா எனத் தெரியவில்லை.
பன்றிகள் ஆங்காங்கே காட்டுப் பகுதியில் இறந்து கிடப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கால்நடைதுறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.