விருதுநகர்--நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி, கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:
திருச்சுழி ஒன்றியம் வாகைக்குளத்தில் டாஸ்மாக் கடை திறப்பதாக உள்ளது. அந்த டாஸ்மாக் கடை திறக்கும் இடத்திற்கு அருகில் பள்ளி, கோயில், பெண்களுக்கான குளியல் பொது ஊரணி உள்ளன.
மேலும் அந்த கிராமத்தில் தொடர்ந்து ஜாதிய பிரச்னைகளும் இருந்து வருகிறது. டாஸ்மாக் கடையை அங்கு திறக்கும் பட்சத்தில் பள்ளி மாணவர்களுக்கும், பெண்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதனால் மக்கள் நலன் கருதி வாகைக்குளத்தில் டாஸ்மாக் திறப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும், என்றார்.