திருப்பூர், : திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சில் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் 'சைமா' அலுவலகத்தில் நடந்தது. தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். ஆர்பிட்ரேஷன் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடந்த சில மாதங்களாக, திருப்பூர் தொழில்துறையினர் மத்தியில், பண பரிவர்த்தனை தொடர்பான புகார்கள் அதிகம் வருகிறது. 'ஆர்பிட்ரேஷன்' கவுன்சில் மூலமாக, நியாயம் பெற்றுத் தரப்படுகிறது. இருப்பினும், தொழில்துறையினர், எந்தவொரு பரிவர்த்தனையாக இருந்தாலும், 'ஆர்பிட்ரேஷன்' விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைத்து வகை பரிவர்த்தனை பதிவேடுகள், 'பில் ரசீது' களில் 'ஆர்பிட்ரேஷன்' விதிமுறைகளை தெளிவாக அச்சிட வேண்டுமென, கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.