சேலம் : சேலம், அய்யந்திருமாளிகை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு உணவு, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:
மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள, பூஜ்யம் முதல், 6 மாத வரையுள்ள, 466 குழந்தைகளின் தாய்மார்களுக்கு, 2 ஊட்டச்சத்து பெட்டகம், மிதமான எடை குறையுள்ள, 616 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. அதேபோல், 6 மாதம் முதல், 6 வயது வரை ஊட்டச்சத்து குறைபாடுள்ள, 2,581 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்கப்படும். மொத்தம், 3,663 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement