ஓமலுார் : சேலம், கருப்பூர் பெரியார் பல்கலையில், மேலாண்மை துறை, ராஜிவ் தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, பட்டியலின மாணவ, மாணவிவயருக்கு, 3 நாள், 'வாழ்வியல் திறன் மேம்பாட்டு' பயிலரங்கம் நேற்று தொடங்கியது. துறை தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார்.
துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது: உலகளாவிய கல்வி, வணிக நிறுவனங்களோடு நுட்பமான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தனி மனித வாழ்விலும், சமூக வாழ்விலும் திறம்பட வாழ, மொழியறிவையும் அதை திறம்பட வெளிப்படுத்தும் திறனையும் இளைய தலைமுறையினர் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இளைஞர் மேம்பாட்டு நிறுவன தலைவர் வசந்தி ராஜேந்திரன், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.