புதுச்சேரி: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கதிர்காமம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கதிர்காமத்தில், தொகுதி செயலாளர் வடிவேல் ஏற்பாட்டின் பேரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
மார்க்கெட் பகுதியல் நடந்த விழாவிற்கு அவைத் தலைவர் கண்ணபிரான், துணை செயலாளர்கள் தமிழ்வாணன், ராஜேஷ், பிரதிநிதி தனக்கோடி, பொருளாளர் நசீர், தகவல் தொழில்நுட்ப அணி உமேஷ், திருவரசன், எல்லப்பன், பத்மநாபன், அன்பு, குப்புசாமி, ராஜேந்திரன், வள்ளல்பிரபு, சிவபெருமான் முன்னிலை வகித்தனர்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி ஆயிரம் பேருக்கு அன்னதானம், 250 பேருக்கு புடவை, காய்கறி, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவிற்கு மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன், பொருளாளர் லோகையன், தலைமை செயற்குழு இளங்கோவன், பொதுக்குழு வேலவன், சக்திவேல், சிறப்பு அழைப்பாளர்கள் கோபால், கார்த்திகேயன், சண்முகம், கோபாலகிருஷ்ணன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், ராஜாராமன், சீத்தாராமன், மோகன், முன்னாள் தொகுதி செயலாளர் தங்கவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநில அவைத் தலைவர் சிவக்குமார் ஏற்பாட்டின் பேரில், லப்போர்த் வீதியில் உள்ள ஓய்பீஸ் மடத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., மதிய உணவு வழங்கினார்.
உழவர்கரை தொகுதி செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், 500 பேருக்கு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.