இளையான்குடி-மதுரை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி அலுவலகம், மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கி ஆகியவற்றின்சார்பில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைபெற்றது.
தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் நாசர்வரவேற்றார்.
முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமையேற்றார்.சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் பேசினார்.உதவி இயக்குனர் உமா சந்திரிகா, புள்ளியியல் ஆய்வாளர் ராஜேஷ்,கிளை மேலாளர் கலாவதி, உதவி இயக்குனர் அன்புச் செழியன் ஆகியோர்பேசினர்.