உடுமலை, : குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் ஆண்டுவிழா நடந்தது.
விழாவில், பள்ளிச்செயலாளர் சந்தோஷ் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜூலியா முன்னிலை வகித்தார்.
கல்வியாண்டில் கலை, இலக்கியம், விளையாட்டு உட்பட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் மஞ்சுளாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் நடனம், இசை உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.